அவள் யார்

அவள் யார் ..??
*****************

என் அன்னையும் பிள்ளையும் இணைந்த கலவை அவள் ..!!

இயற்கை எழிலும் இறைவனின் விளையாட்டும் கலந்த சிற்பம் அவள்..!!

கோவமும் குணமும் கொண்ட பதுமை அவள் ..!!

நாகரிகமும் நல்நடத்தையும் ஒருங்கிணைந்த ஓவியம் அவள் ..!!

இளைத்த இடையும் கனத்த இதயமும் கொண்ட கன்னி அவள் ..!!

ஒழுங்கான உடையும் ஒய்யார தோரணையுமான, அழகிய வர்ணனை உடைய அவள் ..!!

இரவின் நிலவும் ,பகலின் ஞாயிறும் சங்கமிக்கும் சமுத்திரம் அவள்..!!

இவளே
,....என் தோழியும் காதலியுமாய் ஒட்டிபிறந்த

எம் மனைவியாவாள் ..!!!

"எனை தவிர யாரும் அவளை வர்ணிப்பது எனக்கு பிடிக்காது"

----------C.J.C

எழுதியவர் : ஜென்னி (31-Oct-14, 2:35 pm)
Tanglish : aval yaar
பார்வை : 443

மேலே