ஏழ்மை

விநோதமாய் இருக்கிறது
எதையும் பார்க்காமல் இருப்பதற்கு
உறங்கா இரவுகளின்
வெள்ளி முளைக்கும் கனத்தை
எனதிரு விழிகளால்
மறுதலிப்பதும் முடியாதது
இதுவரை பார்த்ததில் எதுவுமே
நினைவில் இல்லை
இந்த வாழ்வு எதையுமே
எனக்கு நிரந்தரமாக்கவில்லை
ஒடிந்த கிளைகளில் முளைக்கும்
ஆசைகளை அடுப்பில் போடலாமென்றால்
பட்டினியோடுதான் ஒட்டு மொத்த
ஆசைகளையும் அவதானிக்கவேண்டியுள்ளது...!!!

எழுதியவர் : கீர்தி (2-Apr-11, 4:46 pm)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 418

மேலே