+உன் நினைவுகளைத் தேடி+

நான் கிடந்தேன் வாடி
உன் நினைவுகளைத் தேடி

நீயோ மறைந்தாய் ஓடி
தானாய் வளர்ந்தது தாடி

உன்னை மட்டுமே பாடி
நின்றேன் வீட்டின் மாடி

பிடித்தோர் அனைவரையும் சாடி
பிடிக்காத துன்பங்களை நாடி

கவிதைகள் பிறந்தது கோடி
நீஎங்கே போனா யோடி

காதலை மறைக்காதே மூடி
சொல்லமுடியாமல் ஆனேன் பேடி

வாசனை இழந்தது பூடி
யோசனை இழந்தது நாடி

உண்ணும் ஒவ்வொன்றும் காடி
சிறிதுபுன்னகைத்து விட்டேனும் போடி

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Nov-14, 8:29 am)
பார்வை : 603

மேலே