வகுப்பறை - கவிதைப் போட்டி
உருவாய் பிறப்பெடுப்பது
தாயின் கருவறை.
உன்னதக் கோயிலாய்
ஒருங்கிணைவது வகுப்பறை.
கருவறையில் பூத்த
மழலைப் பூக்கள்
வகுப்பறைத் தோட்டத்தில்
வாசும் வீசும் ஆக்கல்
மழலைப் பூக்க(ளில்)ளால்
மலரும் சப்தங்கள்
மட்டில்லாப் பெற்றோருக்குப்
புலரும் சப்தஸ்வரங்கள்.
பூக்கள் அதை
வகைப்படுத்தும் வகுப்பறை.
வண்டுகளாய் ஆசான்கள்
வலம்வந்து தொகுக்கும் தொகுப்பறை.
இங்குதானே உள்ளது
கல்விக்கண் ஊற்று.
பொங்கும்தானே பூக்களில்
தங்குகின்றக் கூற்று.
வகுப்பறைத் தோட்டத்தில்
வளர்கின்றப் பூக்களுக்குள்
நடக்கும் பட்டிமன்றங்கள்.
நமக்கெல்லாம் அது
இன்பத்தின் முற்றங்கள்.
சீருடை அணிந்து
செல்லுகின்ற பூக்கள் - நம்மிடம்
சொல்லுகின்ற பண்ணின் பாக்கள்.
சிலிர்க்கும் உணர்வுக்குள் தாக்கல்.
வகுப்பறைக்குள் சென்றதுமே
வண்ணப் பூக்களுக்குள்
வந்தனங்கள் நடக்கும் - பின்
வளையத்திற்குள் அடங்கும்.
வகுப்பறைக்குச்
செல்லாதோர் எவருண்டு?
வளமான சீர்க் கல்வியினை
பெறாதவர் எவருண்டு?
அறியாததை
அறியவைக்கும் வகுப்பறை.
அறிய வைத்ததை
புரிய வைக்கும் பூஜையறை.
வகுப்பறை எனும்
பூஜை அறைக்குள்
பூக்கின்றப் பூக்கள் - என்றும்
பூரிப்பைத் தருகின்ற
புதியப் படைப்புகள்.