பார்வைகள்

150...

வளரும் போது கூட ..
கறைகள் இல்லை..
நிலவில்!

வளரும் போது கூட
குறைகள் இல்லை ..
காதலில்..!

நிலவு வளர்ந்த பின் தெரியும்..
கறைகள்..
கறைகளே அல்ல!

காதல் கனிந்தபின் தெரியும்
குறைகள்..
குறைகளே அல்ல!

அப்படியும் தெரிந்தால்..
கோளாறு..
பார்வையிலே!

எழுதியவர் : கருணா (1-Nov-14, 5:19 pm)
Tanglish : paarvaikal
பார்வை : 153

மேலே