கவலை இல்லை

மாற்று மதத்தவன் தான் அவன் ..
மாறாத காதல் கொண்டவன்!
ஆண்டுகள் ஏழாகியும்..
அழியவில்லை அவன் காதல்
அவளும் நிற்கின்றாள்
அப்பா அம்மா ஆசி
கிடைக்காததால்!
இந்துவாகக்கூட மாறுகிறேன்
என்றான் அவன்!
எங்கள் உயர் சாதியாய் மாறிட
முடியுமா என்றார்கள்!
பெண் வாழ்க்கை தேய்கிறது
வீட்டில் வரும் காய்கறிக் காரர் முதல்
மூட்டுவலி சிகிச்சை தரும் மருத்துவர் வரை
பயனளிப்பவர் யாரும் இவர்
மதமுமில்லை .. இவர் சாதியுமில்லை !
தரத்தை மட்டுமே காண்கிறார் ..பெண்
மனத்தை அறிந்திடார்!
மனதில் ஒருவனும் மணத்தில் ஒருவனும்
கொண்டு வாழும் வாழ்விற்கு
பெயர்தான் என்ன ?

எழுதியவர் : கருணா (2-Nov-14, 11:13 am)
Tanglish : kavalai illai
பார்வை : 182

மேலே