காதல் போர்

காதல் போர்.

இருக்கும் இடம் தேடி பெண்ணே
பறக்கும் மனம் பாடி உன்னை—நான்
இறந்தும் அலையும் முன்னே--ஒருமுறை
பறந்து வருக கண்ணே!

பிரிந்த உயிரே மறந்தும் பறந்தாயோ?
சரிந்த உடலாய் கிடந்தும் இறந்தேனோ?
உணர்வே நீயே உணர மறந்தாயோ?
கனவே ஏனோ பிணத்தில் வளர்ந்தாயோ??

உண்ணும் நினைவே தின்னும் தீர்ப்பாயோ?
எண்ணும் கனவே கொன்னும் தூர்ப்பாயோ?
விண்ணும் மண்ணும் நிறைந்த காதலோ!
உன்னுள் என்னை தொலைத்த சாதலோ!

காதல் போரிலுன் கண்ணம்பு பட்டேனோ!
மாதுன் மார்பிலென் எண்ணம்பு விட்டேனோ!
என்னம்பு பட்டநீ என்னதான் ஆனாயோ?
உன்னம்பு பட்டுநான் உன்னுள் வீழ்ந்தேனோ!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (2-Nov-14, 3:13 pm)
Tanglish : kaadhal por
பார்வை : 102

மேலே