அழகும் கூடும் ஆயுளும் கூடும்
கண்கள் இரண்டும் சிவக்க
முகத்தில் கோபக்கனல் வீச
ஆறுதலுக்காக
அழகான பூ ஒன்றை
செடியில் தவழக் கண்டேன்..
என் பார்வை பட்டதுமே
அந்தப் பூ உதிர்ந்து விட்டது..
மனமுடைந்து போனேன்..
மறுநாள்
முகத்தில் இன்பம் பொங்க
அன்போடு
மீண்டும் அந்த செடியைப் பார்த்தேன்
ஆஹா...!!!
என்ன அற்புதம்...!!
மலரப் போகும் மொட்டு கூட
மலர்ந்து என் முகம் காணத் துடித்தது....!
அக்கணம் தான் உணர்ந்தேன்...
இயற்கை கூட
அன்பைத் தான் நேசிக்கும் என்று......
அன்பாக இருங்கள்..
அழகும் கூடும்
ஆயுளும் கூடும்.......