வங்கக்கடல்
வங்கக்கடல் அது அள்ளித்தரும்தங்கத்திடல்
அது காட்டும் அலை
அது தாண்டி போடு வலை
தினந்தோறும் கடல் வேட்டை
தயங்காமல் விடு போட்டை
அலை தாண்டும் விளையாட்டை
ஆதி முதல் நடை போட்டோம்
வங்கக்கடல் உள்ளவரை
அதன் வயித்தில் கலம் கொள்வோம்
வாழ்வில் கலக்கம் கொள்ளோம்
வங்ககடலே உன் மேனி தரையாக இருந்திருந்தால் தமிழனின்
கால்த்தடம் தடையின்றி படிந்திருக்கும்
உலகெல்லாம் கடலானால்
தடையின்றி வலைவிரிப்போம்
பாய்மரக் கப்பலிட்டு துயில் கொண்டிருப்போம்
இது எங்கள் கடலென்று
எல்லை கிழித்தது யார்
இயற்கை தரும்
கடல் அனர்த்தம்
காற்றை கொண்டு அறிந்திடலாம்
மனிதன் தரும் அனர்த்தம்
கடல் கன்னி கடல் எல்லாம்
கடல் கண்ணிவெடிகளே
பிறந்தது தாய் மடி
மடிவது கடல்மடி ஆயின்
மகிழ்சியே