மு.க.சரவணன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மு.க.சரவணன் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 13-Feb-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 156 |
புள்ளி | : 13 |
கருவறையில் கிடைக்காத
கண்ணியமான உறவு
மனதிலே ஆழப் பதிந்த
மாண்புமிகு உறவு
உணர்விலே பூத்துக் குலுங்கும்
உன்னதமான உறவு
சொந்தங்கள் தாண்டி நிற்கும்
சுகமான உறவு
அரவணைத்து ஆறுதல் சொல்லி
ஆனந்தமளிக்கும் அற்புத உறவு
மூன்றெழுத்தில் முடியும் உறவு
மூச்சு நின்றாலும் முடியாத உறவு
முக்கனிச் சுவையில் ஓர் உறவு
மூடாக் கதவாய் திறந்திருக்கும் உறவு
பாலினம் காணா ஓர் உறவு
பாகுபாடில்லாத பரந்த உறவு
பரம்பொருள் நமக்களித்த
பாசமிகு உறவு
உண்மையான நட்பு..!!
கற்றவர் கண்டு சொன்ன சொற்றோடராய்
புலவர் போற்றி வளர்த்த பொற்றோடராய்...
எம் சிங்கார தேன்தமிழ் ஒன்றே
தெள்ளமுதாய் தினம் தினம் தித்திக்குதே..!!
வளமுடை தமிழ்நாட்டில் பிறப்பதற்கே- நல்
வரங்களாய் நீ பெற்று வந்தாய்..
வரங்கள் தான் வீணாய் போக
கரங்களை நீ நீட்டுகின்றாய் - வெறும்
காசுக்காய் அந்நியரிடம் கையேந்தி நின்றாய்..
ஒருவனுக்கு ஒருத்தியே உறவடா ! - என்றும்
தமிழர்க்கு தமிழே உயர் பந்தமடா !!
தமிளுக்க் கெல்லை யொன்றில்லையடா - அஃது
உனை தொல்லையாய் ஒருக்காலும் என்னாதடா
வாசித்தாலே போதுமடா ! - நல்
ஆசிகள் செய்தே அருளுமடா !!
நீ வாழும் இறுதி நிமிடம் வரை....!!
கற்றவர் கண்டு சொன்ன சொற்றோடராய்
புலவர் போற்றி வளர்த்த பொற்றோடராய்...
எம் சிங்கார தேன்தமிழ் ஒன்றே
தெள்ளமுதாய் தினம் தினம் தித்திக்குதே..!!
வளமுடை தமிழ்நாட்டில் பிறப்பதற்கே- நல்
வரங்களாய் நீ பெற்று வந்தாய்..
வரங்கள் தான் வீணாய் போக
கரங்களை நீ நீட்டுகின்றாய் - வெறும்
காசுக்காய் அந்நியரிடம் கையேந்தி நின்றாய்..
ஒருவனுக்கு ஒருத்தியே உறவடா ! - என்றும்
தமிழர்க்கு தமிழே உயர் பந்தமடா !!
தமிளுக்க் கெல்லை யொன்றில்லையடா - அஃது
உனை தொல்லையாய் ஒருக்காலும் என்னாதடா
வாசித்தாலே போதுமடா ! - நல்
ஆசிகள் செய்தே அருளுமடா !!
நீ வாழும் இறுதி நிமிடம் வரை....!!
வாங்கியது தலைவலிக்கு மருந்து
வந்தது வாந்தியும் பேதியும்..
காலாவதி மருந்துகள்......
ஏழை சிறுவன் ஒருவன் , தனது விலை உயர்ந்த காரை வியப்புடன் பார்ப்பதை பார்த்தவர், அந்த சிறுவனை உக்காரவைத்து கொஞ்சதூரம் ஓட்டினார். உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது ,என்ன விலை என சிறுவன் கேட்டான்.தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர்.அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன்சொல்ல,
நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா? சிறுவன் சொன்னான். ‘இல்லை , நான் அந்த உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும்என நினைக்கிறேன்’ என்றான்.!!
பனிரெண்டு வருட பள்ளியும்
நான்கு வருட கல்லூரியும்
கற்றுத் தராத பாடத்தை
வேலை தேடும்
ஒரு வருட வாழ்க்கை
கற்றுத் தருகிறது....
நாவினிலே இனிக்கின்ற
நற்றமிழே!உன்
நினைவினிலே மலர்கின்ற
சிறு மொட்டு நான்...!
சுவையோடு சிரிக்கின்ற
செந்தமிழே!என்
சுவாசத்தில் கலந்திட்ட
சுமைதாங்கி நீ!
தனிமையிலே என்னுயிரை
கரைப்பவளே...என்
தாகத்தின் வேகத்தை
தீர்ப்பவள் நீ!
சுடரோடு போராடும்
இருளினிலே...என்
சுமையினையும் சுகமாக்கும்
போதை நீ !
இயல் இசை நாடகமாய்
இனிப்பவளே...என்
இதயத்தின் சுவாசத்தை
அலங்கரிப்பவள் நீ !
மதுரைச் சங்கத்தின் முதல்மகளாய்
வளர்ந்தவளே...
மண்ணில் எனக்கான உணர்வை
வெளிப்படுத்தியவள் நீ !
கொங்குதமிழ் சுவையினிலே
குதூகலிப்பவளே...அங்கு
செங்கரும்பை தோற்றிடச்செய்ய