வாழும் இறுதி நிமிடம் வரை

கற்றவர் கண்டு சொன்ன சொற்றோடராய்
புலவர் போற்றி வளர்த்த பொற்றோடராய்...
எம் சிங்கார தேன்தமிழ் ஒன்றே
தெள்ளமுதாய் தினம் தினம் தித்திக்குதே..!!

வளமுடை தமிழ்நாட்டில் பிறப்பதற்கே- நல்
வரங்களாய் நீ பெற்று வந்தாய்..
வரங்கள் தான் வீணாய் போக
கரங்களை நீ நீட்டுகின்றாய் - வெறும்
காசுக்காய் அந்நியரிடம் கையேந்தி நின்றாய்..

ஒருவனுக்கு ஒருத்தியே உறவடா ! - என்றும்
தமிழர்க்கு தமிழே உயர் பந்தமடா !!
தமிளுக்க் கெல்லை யொன்றில்லையடா - அஃது
உனை தொல்லையாய் ஒருக்காலும் என்னாதடா
வாசித்தாலே போதுமடா ! - நல்
ஆசிகள் செய்தே அருளுமடா !!
நீ வாழும் இறுதி நிமிடம் வரை....!!

எழுதியவர் : மு.க.சரவணன் (8-Jul-15, 10:10 pm)
பார்வை : 121

மேலே