தமிழே உனக்காக---------நிஷா
![](https://eluthu.com/images/loading.gif)
நாவினிலே இனிக்கின்ற
நற்றமிழே!உன்
நினைவினிலே மலர்கின்ற
சிறு மொட்டு நான்...!
சுவையோடு சிரிக்கின்ற
செந்தமிழே!என்
சுவாசத்தில் கலந்திட்ட
சுமைதாங்கி நீ!
தனிமையிலே என்னுயிரை
கரைப்பவளே...என்
தாகத்தின் வேகத்தை
தீர்ப்பவள் நீ!
சுடரோடு போராடும்
இருளினிலே...என்
சுமையினையும் சுகமாக்கும்
போதை நீ !
இயல் இசை நாடகமாய்
இனிப்பவளே...என்
இதயத்தின் சுவாசத்தை
அலங்கரிப்பவள் நீ !
மதுரைச் சங்கத்தின் முதல்மகளாய்
வளர்ந்தவளே...
மண்ணில் எனக்கான உணர்வை
வெளிப்படுத்தியவள் நீ !
கொங்குதமிழ் சுவையினிலே
குதூகலிப்பவளே...அங்கு
செங்கரும்பை தோற்றிடச்செய்யும்
செல்லமகள் நீ !
எழிலோடு என்றென்றும்
இருப்பவளே.....
எண்ணத்தில் இளமையாய்
வாழ்பவள் நீ !
வாழ்க ...வாழ்க....