மலேசியா எங்கள் நாடு

இந்தநாடு எங்கள் நாடு -என்றும்
சொந்தநாடு என்று பாடு

பல்லினங்கள் ஒற்றுமையாய்
==பரிணமிக்கும் தாய்வீடு
===பண்புதமிழ் சீனமலாய்
====பந்தமென திகழ்நாடு (இந்தநாடு..)

உள்ளிருக்கும் இயற்கைவளம்
==உயர்ந்திருக்கும் திருநாடு
===உண்மையாக மக்கள்மனம்
====உவந்திருக்கும் ஒருநாடு (இந்தநாடு..)

பள்ளிகளில் கல்விநலன்
==பயிற்றுவிக்கும் பண்பாடு
===பக்கத்து நாடுகளும்
====பார்த்திருக்கும் வியப்போடு (இந்தநாடு..)

வல்லவனாம் நல்லிறைவன்
==வாழ்த்திடும்நல் மலைநாடு
===வன்முறைகள் நாமொழித்து
====வாழ்ந்திடுவோம் சிறப்போடு (இந்தநாடு..)

எழுதியவர் : அபி (3-Nov-14, 1:33 am)
பார்வை : 1038

மேலே