நான் கண்ட கடவுள்

கர்ப்பத்தில் அன்னை
என்னை சுமக்க
கருவில் நான் துடிக்க
இதமாய் பதிந்தது
இரு இதழ்கள்

பிரசவ வலியில்
அவள் துடிக்க
இருப்புக்கொள்ளாமல் தவித்தது
இன்னோர் உயிர்

அழுக்குரல் கேட்ட
அரைநொடியில்
ஆனந்த கண்ணீர்
அணை உடைக்க அள்ளி
அணைத்தது இருகரங்கள் ..

கருவில் சுமந்தவள்
தரையிறக்க
நெஞ்சில் சுமந்தது
ஓர் இதயம்


காமம் இல்லா முத்தம் தனை கருவில் நான் பெற்றதினால்
காதலோடு வாழ்ந்திடவே கற்று
தந்தது இரு கண்கள்

கொடுத்ததெல்லாம் பெற்றுகொண்டேன்
கொஞ்சும் கிளியாய்
நான் வளர்ந்தேன்

காலன் அவன் கண்பட்டான்
காவுகொண்டான்
என் உறவை
கண்கள் தேடுதப்பா
உன் வரவை வேண்டுதப்பா

நடமாடும் கோயில் நீ
நான் கண்ட கடவுள் நீ
மீண்டும் உன்னை
காணவேண்டும்
கனவிலேனும் வந்துவிடு...

"கண்ணீருடன் உன் கயல்குட்டி "

எழுதியவர் : கயல்விழி (3-Nov-14, 7:58 am)
பார்வை : 470

மேலே