வகுப்பறை

பாடப்புத்தகம் கையில் ஏந்தியபடி
ஆசிரியருக்கு தெரியாது உன்னிடம்
நான் பேசக் கற்று கொண்டது - வகுப்பறை !!
கடைசி பெஞ்சில் உட்கார்ந்து
அரட்டை அடித்து நட்பின்
ஆழத்தை புரிய வைத்தது - வகுப்பறை !!
பரீட்சையில் வெற்றி பெற
முயற்சியின் ஊன்றுகோளாய் நல்வழிப்படுத்தி
வெற்றிப்படிகளை எட்டச் செய்தது - வகுப்பறை !!
பக்திபழமாய் ஆண்டுத்தேர்வு எழுதுகையில்
பழைய நியாபகங்கள் ஒன்றிப்போக
உன்னால் முடியுமென உற்சாகம் ஊட்டியது - வகுப்பறை!!
சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியதும்
நானும் அருமை நண்பர்களும்
பாசப்பறவைகளாய் பாடித்திரிந்ததும் என் - வகுப்பறை !!
மாணவ கண்மணிகளின் சொர்க்கபுரியாய் !!
பன்னிரெண்டாண்டு ஓடித் திரிந்த
நல்லதொரு ஆலயமன்றோ என் - வகுப்பறை ??
BY
R.Helen Vedanayagi Anita,
Third Year,
Electronics and Communication Department,
Francis Xavier Engineering College,
Vannarpettai,
Tirunelveli - 627003