அன்பின் பரிமாற்றம்

அன்பின்
பரிமாற்றம்
எந்த பருவத்திலும்
சிகரம் !
அன்பு
தன்னம்பிக்கையின்
மூலதனம் !
அன்பு
அள்ளி அளிக்கும்
வெற்றியயை !
மன நோய்களுக்கு
மானசீகமான மருந்து !
நோய்களை தீர்க்கும்
அழகிய
மருந்து !
மனித நேயத்தை
வளர்க்கும் !
மனிதனை
மனிதனாய்
வாழ வைக்கும் !
அன்பு
அத்தியாவச
உணவு!
காதலர்கள்
சங்கமிக்கும்
இடம் !
மழலை பருவம் முதல்
முதுமை பருவம் வரை
மனிதனின்
மூச்சு காற்று !
அன்பை சுவாசித்து
அன்பை உணவாய் உண்டு
அன்பை பரிமாற்றம் செய்து
அன்பினால்
அனுபவித்து வாழ்வோம்
வாழ்க்கையை !!!!!!!