தோழியும் தோழனும்

அன்புத் தோழியே
என் கண்ணீர் துடைத்த
கரங்கள் உன்னுடையதாக
இருந்ததாலோ என்னவோ..
கண்ணீர் கூட இனிக்கிறது..!!
ஆருயிர்த் தோழனே
விழும்போதெல்லாம்
என்னைத் தூக்கி
நிறுத்தியது நீயாக
இருந்ததாலோ என்னவோ...
துரத்திய துன்பம் எல்லாம்
தூசியாகி விட்டது..!!
என்னே..!
நட்பின் அருமை..!!