அன்பு
வானவர்க்கும் தானவர்க்கும்
ஆதிமுதல் பூமிதனில்
வாழ்பவர்க்கும் ஆதியந்த
ஆண்டவர்க்கும் அணி!
கானகத்துள் துஞ்சுகின்ற
மாக்களுக்கும் மா நிலத்து
மக்களுக்கும் ஊட்டுகின்ற
அன்னையர்க்கும் அணி!
மாப்பொருளாம் பரமதுவே
பாமரருள் தேங்கிநிற்கும்
உண்மைகண்டு சேவைசெய்யும்
மேன்மையர்க்கும் அணி!
கால்கொலுசோ வல்லவது,
கைவளையோ வல்ல!
காதணியோ வல்லவது,
அட்டிகையோ வல்ல!
முத்தணியோ வல்லவது,
ஆரமதும் அல்ல!
மூதறிவா லுணர்வீர்நல்
லணியதுவாம் அன்பு!
*************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்