வாழ்ந்து காட்டுவோம்

அன்பே அன்பே
அன்பே ஆருயிரே
நீயா அழகி நீ
யார் நீ...!!!!!

மொழி ஊமை விழி
பொன் வண்டு
பொன் வசந்தம்
பூவே பூ சூடவா
உன்னிடத்தில்
என்னைக்
கொடுத்தேன்..!!!

பூவே உனக்காக
உயிர் இதயம்
இது தாய் மீது
சத்தியம்...!!!

உன்னாலே
உன்னாலே
என் நெஞ்சில்
ஓர் ஆலயம்
காதல் கோட்டை..!!!

எங்கமாமா
ரவுடி ரங்கா
தளபதி மன்னன்
வில்லாதி வில்லன்
அச்சம் இல்லை
அச்சம் இல்லை
உயிர் உள்ளவரை
என் உள்ளம்
ஆலயமணி.
நான் நினைப்பதை
முடிப்பவன்...!!!

காஞ்சனா
திருவிளையாடல்
அன்னியன்
தசவதாரம்
அவதாரம்
உனக்காக
எல்லாம்
உனக்காக..!!!

நீபாதி நான் பாதி
அன்புக்கு நான் அடிமை
தாலாட்டுப் பாடவா
ஆராரோ ஆரிராரோ
பாடும் வானம் பாடி
பறக்கும் பாவை
பொன் ஊஞ்சல் ஆவேன்..!!

சொல்ல மறந்த கதை
புதுக் கவிதையாக
மீன்டும் நானே வருவேன்
லேசா லேசா
நெஞ்சம் மறப்பதில்லை..!!

சின்ன வீடு
பேய் வீடு
13நம்பர் வீடு
ஜெக மோகினி
தேடி வந்த மாப்பிளை
இல்லை நான்
சொல்வதெல்லாம் உண்மை
உத்தம புத்திரன்..!!!!

ரயில் பயணங்களில்
நாம் சந்திப்பு விதி
இதய வீணை
மௌன ராகம்
காதல் கீதம்
துடிக்கும் கரங்கள்
இணந்த கைகளாக
நானே வருவேன்
ஆயிரம் ஜென்மம்..."!!!

பாக்கியசாலி
பார் மகளே பார்
படகோட்டி
அலாவுதீன் அற்பூத தீவுக்கு
அவதாரப் புருசனாய்
நான் வாழவைப்பேன்..!!!

எழுதியவர் : தழிழ்த்தேனீ இ.சாந்தகலா (3-Nov-14, 10:49 am)
பார்வை : 130

மேலே