சிறைக் கதவுகள்

எழுத்தோடு ஒன்று சேரும்
கவிதைக்குள் வலை பின்னும்
பிரிந்துவிடும் அகராதியில்
வார்த்தைகள் முட்களாக...

துடுப்புகள் எதற்கு?
அமைதியான
கடல் பறவைக்கு....

அழகான தன்குறிப்பில்
கையெழுத்தே பிரதானம்
சிறைக் கைதிக்கு....!

எடுத்தேன் பார்த்தேன்
தூசு தட்டினேன் படித்தேன் உன்னை
புரட்டி புரட்டி ரசித்தன தென்றல்
என்னை விலக்கி...!

நீர் முத்துக்கள் சூடிய தாமரையிலை
என்னிடம் கேட்டது
தன்னையும் பாடச் சொல்லி....!

தொட்டுத் தொட்டு
ரசித்துப் பார்க்கச் சொல்கிறது
தொட்டாற் சிணுங்கி
தனக்கும் மனம் உண்டென்று .....!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (3-Nov-14, 10:39 am)
பார்வை : 94

மேலே