ராஜா ராணி

ஞாயிற்றுக்கிழமை:

கதிரவணின் கதிர் முகத்தில் மேல் வந்து விழவும், அந்த வெப்பத்தில் கண் விழித்தாள் இக்கதையின் நாயகி மீரா. சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் மேல்நிலை பள்ளி அறிவியல் ஆசிரியையாக பணி புரியும் 28 வயதான மீராவிற்கு பார்த்த உடனே மனதில் பதியும் பளிச்சென்ற முகம்... எப்போதும் அவள் இதழ்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த புன்னகைதானாகவே மற்றவர் முகத்திலும்ஒரு புன்னகையை வரவழைக்கும்... ஆனால் ரோஜா பூவின் மீது மெல்லிய திரையை போட்டு மறைத்ததுப் போல், அவளின் அழகிய முகத்திலும் ஏதோ ஒருவிதமான திரை இருந்தது...

படுக்கையில் இருந்து மீரா எழும் சத்தம் கேட்டு திரும்பிய தேவி(மீராவின் ரூம்மேட்),

“குட் மார்னிங் மீரா...

பதிலுக்கு புன்னகை மட்டும் புரிந்த மீரா வேறு எதுவும் சொல்லாது அமைதியாக பாத்ரூம் நோக்கி சென்றாள்.
தேவி-ன் முகத்திலும் புன்னகை தோன்றியது. மீரா எப்போதும் இப்படி தான்... ஒரு புரியாத புதிர்!

மீராவும்,தேவியும் ஒன்றாக இதே போர்ஷனில் 2 ஆண்டுகளாக தங்கி இருக்கிறார்கள். ஆனாலும், இருவருக்குள்ளும் சாதாரண பரிச்சயம் இருந்ததே தவிர, நட்பு என்று ஏதுமில்லை...இருவரும் தனி தனியே தங்களுக்கு வேண்டியதை சமைத்துக் கொள்வார்கள். அப்படி சமைத்ததை இது போன்ற விடுமுறை நாட்களில் கொஞ்சமாகபகிர்ந்துக் கொள்வார்கள்! மற்றபடி, கரண்ட் பில், வாடகை இத்தியாதி செலவுகளை எந்த கணக்கும் பார்க்காது இரண்டாக பிரித்துவீட்டு ஓனரிடம் கொடுத்து விடுவார்கள்...

அன்று மாலை tv-ல் மீரா ்கேட்டுக் கொண்டிருந்த பாடல் தேவியின் காதில் விழுந்தது...

ஊமை பெண் ஒரு கனவு கண்டாள் – அதை உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்வெளியே சொல்லவும் மொழியில்லை- வேதனை தீரவும் வழியில்லை“

மீரா, உங்களுக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்குமா? நிறைய தடவை இதையே கேட்குறீங்க?”“

ஆமாம் தேவி பிடிக்கும்...

”“ம்ம்ம்... நல்ல பாட்டு தான்... ஆனால் வெளியே சொல்ல முடியாவிட்டால் மனசிலேயே ஏன்வச்சிருக்கனும்? எழுதி வென்ட் அவுட் செய்திடலாமே?

”“செய்யலாம் தான்...” என்ற மீராவின் பார்வை தன்னிச்சையாக மேஜையின் ஒரு மூலையில் இருந்த அந்த டைரியின் மீது விழுந்தது.அதை கவனிக்காத தேவி, தன் பேச்சை தொடர்ந்தாள்.

“சரி இந்த புது ட்ரஸ்ஸில் எப்படி இருக்கேன்?”“

எப்போதும் போலவே அழகாக தான் இருக்கீங்க...” என்றாள் மீரா.அதே ரெடிமேட் புன்னகையுடன்.

இப்படி மலர்ச்சி இல்லாமல் புன்னகைக்கும் போதே இத்தனை அழகாக இருக்கும் இவள் கொஞ்சம் முக மலர்ச்சியுடன் இருந்தால் எத்தனை அழகாக இருப்பாள்!தேவி எத்தனையோ முறை இதை மனதில் நினைத்திருக்கிறாள், ஆனால் ஏனோ மீராவிடம் இதை நேராக சொல்ல முடிந்ததில்லை... இப்படி ஏதாவது சொன்னால் மீராவின் முகம் இன்னும் வாடி போகும்... ஏன் என்னவென்றுபுரியாமல் அவள் தான் மேலும் குழம்ப வேண்டி இருக்கும்... எதற்கு அந்த வம்பு?

ஆனாலும் பொட்டில்லாத அந்த நெற்றியும், ஒளி இல்லாத அந்த கண்களும் கொஞ்சம் மனதை அசைக்க,“தப்பா எடுத்துக்காதீங்க மீரா, நேற்று இரண்டு ரோஸ் வாங்கினேன்... இன்னைக்கு வைக்காவிட்டால் வேஸ்ட் ஆகிடும்... ஒன்னை நீங்க வச்சுக்குறீங்களா?

”மீராவின் முகம் சட்டென இருண்டது...“உங்களுக்கு தான் தெரியுமே தேவி... ப்ளீஸ் எனக்கு வேண்டாம்...

”மீரா ஒரு விதவை என்பதற்கு மேல் தேவிக்்கு எதுவும் தெரியாது. ஆனால் இந்த காலத்திலும் இப்படி இளவயதிலேயே கணவனை இழந்த ஒரே காரணத்திற்காக பொட்டு வைக்காமல், பூ வைக்காமல் இருக்கும் மீராவின் நடவடிக்கை தேவிக்்கு பிடிக்கவில்லை. ஆனால் அவளுக்கு மீராவிடம் அதை பற்றி விவாதிக்கவும் மனம் வரவில்லை... எனவே அதற்கு மேல் வற்புறுத்தாது, ஒரு போலி புன்னகையுடன் அங்கே இருந்து கிளம்பினாள் தேவி...

பின், மீரா மீண்டும் சி.டி ப்ளேயரில் சற்று முன் நிறுத்தி வைத்திருந்த இடத்திலிருந்து பாடலை பாட விட்டு விட்டு, நாற்காலியில் சாய்த்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்...

உயிரற்ற கொடியில் மலர்ந்திருந்தால் அவள் ஒரு நாளாவது மகிழ்ந்திருப்பாள்உலவும் காற்றாய்ப் பிறந்திருந்தாலும் ஒவ்வொரு நாளும் வாழ்ந்திருப்பாள்

மூடியிருந்த மீராவின்கண்களின் ஒரத்தில் இருந்து சின்ன கண்ணீர் துளி எட்டி பார்த்தது...

Uk-ல் காரில் செல்லும் நம்ம ஹீரோ கிருஷ்ணாவின் மனதில் மகிழ்ச்சி அலை மோதிக் கொண்டிருந்தது.3 வருடங்களுக்கு பிறகு இந்தியா செல்ல போகிறான்... பெற்றோரை, தங்கையை நேரில் பார்க்க போகிறான்..29 வயதான கிருஷ்ணன் பார்ப்பதற்கு காதலுக்கு மரியாதை விஜய்-ஐ நினைவு படுத்தினான்... இந்தியர்களுக்கே உரிய கம்பீரமான மாநிறத்தில், உயரமாக, மிடுக்குடன் தோற்றம் அளித்தான்.சென்னையில் வசிக்கும் அவன் அப்பா விநாயகம் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். பள்ளிக்கூடத்தை போலவே வீட்டிலும் மிகவும் கண்டிப்பானவர்... ஆனால் அம்மா சகுந்தலா-ன்் செல்லப்பிள்ளையான கிருஷ்், எப்போதும் அம்மாவின் துணையுடன் ஏதேனும்தவறை செய்தாலும் கூட தப்பித்துக் கொள்வான்.இப்படி பல விதமான எண்ண ஓட்டங்களுடன்,காரை நிறுத்தி விட்டு,அங்கே இருந்து ஏர்போர்ட் செல்லும் இலவச பஸ்ஸில் ஏறி பிரிட்டிஷ் ஏர்வேஸ் கவுன்டரைஅடைந்தான்.பெட்டிகளை செக்-இன் செய்து விட்டு, பாதுகாப்பு சோதனையை கடந்து, இரண்டு மணி நேரம் ப்ளைட்டிற்காக ‘கேட்டில்’ காத்திருந்து, ஒருவழியாக ப்ளைட்டில் ஏறி அமர்ந்தவனுக்கு அப்பாடா என்றிருந்தது...

அவன் அருகில் வந்து அமர்ந்த அந்த அமெரிக்க இளநங்கை,“ஹலோ...” என்று அவனை பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்தாள்.

தொடரும்....

எழுதியவர் : satheesh (3-Nov-14, 9:26 pm)
Tanglish : raja raani
பார்வை : 698

மேலே