நாளைய சமுதாயம்--------------------- போட்டிக்கவிதை

நாளைய சமுதாயம்
நாம்தான்..
வல்லரசாகும்
நாளைய சமுதாயம்
நம்மால்தான்....
நாமே நமக்கு
பகையாகினோம்...
பாதைமாறி பயணம் போகலானோம்...
மதி சிறந்து
பிறந்தும் கூட,
மதி இழந்த மூடர்களாக
நாமாகினோம்...
பொழுதுபோக்கிலேயே
பொழுதுகளை
போக்குவோர் சிலர்...
சினிமா மோகத்தால்
பித்து பிடித்த பக்தனாய்
கட் அவுட்டுக்கு
பாலபிசேகம் எடுப்போர் பலபேர்...
நாகரீகமென சொல்லி
எல்லை மீறிய
அநாகரீக செயல்களிலும் ,
அரை குறை ஆடையிலும் ,
அலைகிற இளைய சமுதாயம் ,
அலைபேசியே உலகமென
அத்தியாவசிய தேவையென
வெட்டிப்பேச்சில் மூழ்கி கிடக்கிறது...
மங்கையரில் சிலர்
அழகு நிலையங்களில் குடிகொள்ள ,
ஆடவரில் பலரோ ,
குடி கொண்டு
மதுபான கடைகளில் விழ ,
ஒளிர்கிறதா இல்லை ஒழிகிறதா ?
நாளைய சமுதாயம்...
பிறந்தது இந்திய மண்ணில்
ஆனால்,
வளர்வதோ மேலை நாட்டு கலாச்சாரத்தில்......
நாளைய சமுதாயம்
நாமென சொன்னால் போதுமா?
நாளைய சமுதாயமே
நம் பெயர் சொல்ல வேண்டாமா? ..
இளைய சமுதாயமே ,
மனிதம் போற்ற வேண்டும்..
மனித நேயத்துடன்
மானுடம் காக்க வேண்டும்...
மனித இதயம் காக்க மட்டும் அல்ல ,
மண்ணின் இயற்கை வளம் காக்கவும்
நம்மாலேதான் முடியும்....
கிராமமோ , நகரமோ
வாழும் உயிர்கள் ஒன்றே,
ஓடும் உதிரமும் ஒன்றே ,
என்பதை மதித்து நடக்க வேண்டும்...
உலகை ஆளும் உயிர்கள் வாழ
உணவு வேண்டும் ..
உணவை பெற என்றுமே
உழவு வேண்டும்..
உழவு செய்யும் தோழமைக்கும்,
உழைத்து வாழும் தோழருக்கும்,
உணவே இல்லா உயிர்களுக்கும்
நாம் உதவிட வேண்டும்.....
சொன்னவை செய்வோம் !
நாளைய ஒட்டுமொத்த சமுதாயமே ,
இவர்கள்தான்
நாளைய சமுதாயம்",
இவர்களால் தான்
உருவாகிறது
நாளைய சமுதாயம், என
சொல்லும் படி செய்வோம்.......
சீ. கவிதா .
முதுகலை உளவியல் முதலாம் ஆண்டு ,
அரசு கலைக் கல்லூரி , கோவை.