வரம் வரும் வரை

தென்றலை..நான் விரும்பியதுண்டு ..
அதை விட நீ மென்மையானவள்
என்பதை நான் அறியும் வரை!

மலர்களை அழகு என்றெண்ணினேன் ..
அவற்றை நீ சூடிய பின்
அவை பெற்ற அழகைக் காணும் வரை!

முழு நிலவை ரசித்ததுண்டு ..
நீ அதை விட முழுமையாய்த்
தெரியும் வரை!

சிற்பங்களை கண்டு வியந்ததுண்டு..
உன் கட்டுடல் அழகைக்
காணும் வரை!

காதல் என்பதை அறிந்ததில்லை..
உன் காதலை என் மீது
நீ தூவும் வரை!

எழுதியவர் : கருணா (4-Nov-14, 9:38 am)
Tanglish : varam varum varai
பார்வை : 269

மேலே