கர்வம்

என் தோட்டத்தில்
பூத்த பூக்களினால்
எனக்கு பெருமை..
அவைகளுக்கோ கர்வம்..
அந்தப் பூக்களை..
நான் நேசித்ததும்..
பெருமை கொண்டதும்..
பழைய கதை!
ஒரு நாள் ..
அந்தத் தோட்டத்தில் ..
நீ வந்து நின்று விட்டு போன பிறகு..
எனக்கு மட்டுமல்ல..
என் தோட்டத்து பூக்களுக்கும்
அகம்பாவம் அழிந்து போனது..!
வாடாத மலர் நீ என்பதாலா?
உன் அழகுக்கு ..
அவை சலாம் போட்டதாலா ?
அந்தப் பூக்களும்..
நானும்..
காத்திருக்கிறோம்..
உன்னை ஸ்பரிசித்து
எங்களோடு சேர்த்துக் கொண்டு ..
மீண்டும்..நிரந்தரமாய்
கர்வம் அடைவதற்காக!

எழுதியவர் : கருணா (4-Nov-14, 9:08 am)
Tanglish : karvam
பார்வை : 252

மேலே