இசை பிரிந்தாய்
(ஈழத்தில் நடந்த பெண்கொடுமை
காணொளி கண்ட போது எழுதியது )
உலகத் தமிழனின்
இதயம் கொன்ற
காணொளிகாட்சி
ஏன் என்று கேட்க
யாரும் இல்லா ஆட்சி
உலக பூக்களின்
மலர்ச்சி எல்லாம்
புன்னகையாய்
சிந்திய உன்னை
பூமியில் கசக்கி போட்டனர்
இந்த புல்லலர்
உடல் பொருள் ஆவி
என்ற அத்தனையும்
ஒன்றாக நின்று அழைத்தும்
துயில் கொடுக்க
எந்த கடவுளும் வரவில்லை
மரணம் மட்டும் உன்னை
மனமார அணைத்தது
மணம் மாற மலர் ஒன்று
மண்மீது சாய்ந்தது
ரணம் கண்ட தேகம்
பிணம் என்று ஆனது
லப் டப் லப் என்று
ஓயாமல் இசைத்த
இதயத்தில்
இசை பிரிந்தது
உன்போல் எத்தனை
இசைபிரியாக்கள்
இந்த இனவெறி நாய்களினால்
பிரிந்து போயினரோ
தம் இசையை .