முதுமை
எல்லா உயிர்களும்
படிக்க வேண்டிய
கட்டாயபாடம் முதுமை
முன் யென்ம பலன்களை
அனுபவிக்கும் காலம் இது
அனுபவ புத்தகம் அடுக்கிய
நூலகம் முதுமை
எரிபொருள் ஊற்றிய
இயந்திரம் போல
மருந்துகள் ஏற்றினால்
இயங்கிடும் தேகம்
வந்தவர் ஓர்நாள்
போகவேண்டும் என
தத்துவம் சொல்லி
சென்ற பற்கள்
குருதி பாச்சல் கொஞ்சம்
குறுகி போனதனால்
சுறுசுறுப்பு இழக்கும்
உடல் உறுப்பு
சாதித்தது போதும் என
சமாதான கொடிகாட்டும்
தலைமயிர் நிறம்
என பல மற்றம் காட்டும்
உடலியலில் கண்டு
மனமாற்றம் காட்டுகிறது
இந்த உலகு
முதுமை என்பது
தாழ்த்தபட்ட இனம் போல
தவிர்க்கப்படுகிறது
சமுதாயத்தில்
ஒ மனிதர்களே
முதுமை என்பது
நாளை நாமெல்லாம்
செல்வேண்டிய
ஓர்வழி எனவே
முதியவர் உணர்சிகளை மதிப்போம்