மழைத்துளியின் வார்த்தைகள்

அனைத்து உயிர்களுக்கும் பொதுவான
வெள்ளை இரத்தம் நான்

மேகம் செய்த இரத்ததானம்
மண்ணில் மழைத்துளியாக

உறிஞ்சக் காத்துக்கொண்டிருக்கும்
மரங்களின் வேர்களுக்கு
தாகம் தணிய
நான் வேண்டும்

மரித்துப்போன
ஆழ்குழாய் கிணறுகளுக்கு
மறுபிறப்பெடுக்க
நான் வேண்டும்

நடந்து செல்வதைக் கூட
மறந்துபோன நதிகளுக்கு
ஓடக் கற்றுத்தர
நான் வேண்டும்

நீங்கள் மரங்களை
நடும் போதெல்லாம்
மழைத்துளியான
என் விலா எழும்புகளில்
சிறகுகள் முளைக்கின்றன

வெட்டப்பட்ட மரங்களின்
காய்ந்துபோன இலைகளின்
நடுவே தேடிப்பாருங்கள்
உதிர்ந்துபோன
என் சிறகுகள் கலந்திருக்கும்

நீங்கள் வாழ
வீடு கட்டிக்கொள்ளுங்கள்
உங்கள் சந்ததி
நாளை வாழ்ந்திருக்க
எனக்கும் கட்டிக்கொடுங்கள்
மழைநீர் சேகரிப்பான்
என்னும்
சின்னஞ்சிறிய கூடு

எழுதியவர் : ஆ.ஜான் பிராங்ளின் (4-Nov-14, 7:37 pm)
பார்வை : 69

மேலே