என் காதல்

கண்டேனடி
காதல் கொண்டேனடி
நேரில் நி்ன்றேனடி
இதயம் வென்றேனடி

வெண்மேகம் இன்று
பூமேகம் ஆனது
மழைக்கு பதிலாக
மலர்களை தூவுது
உன் விரலோடு இன்று
என் விரல் சேருது
கரையோரம் நான்கு
கால்தடங்கள் பதியுது

விழிகளோடு மொழிகள்
பேசும் வித்தைகள் செய்வோம்
காற்றோடு கைவீசி
காதல் செய்வோம்
வா பென்னே இன்னும்
நடப்போம் நெடுந்தூரம்
பிரிவினை விலைபேசி
விற்போம் கரையோரம்

மலர்கள் கோடி
மலர்வது உண்டு
உன் இதழ் போல் இல்லையடி
உறவுகள் கோடி
இருப்பது உண்மை
உன்போல் இல்லையடி
இனி வரும் இரவுகளில்
நிலவுகள் தேவையில்லை
நீ ஒருத்தியே போதுமடி

எழுதியவர் : வேலு வேலு (4-Nov-14, 7:30 pm)
சேர்த்தது : பி.வேலுச்சாமி
Tanglish : en kaadhal
பார்வை : 68

மேலே