செல்லத் தமிழ்

எண்ணமதைச் சீராக்க எடுத்துச் சொல்லும்
வண்ண மொழி இன்ப மொழி செல்லத்தமிழ்
கவி வடிவில் கதைவடிவில் கலை வடிவில்
கச்சிதமாய்க் கருத்து சொல்லும் அன்புத் தமிழ்
அன்புத் தமிழ் ஆரோக்கியம் தந்த தமிழ்
ஊருவிட்டு ஊரு சென்று நாடு விட்டு நாடு சென்று
நாம் தேடும் மொழி இனம் நம் தமிழே
தமிழ் பேசும் ஒருவர் கிடைத்து விட்டால் போதும்
சொர்க்கமே வந்து விட்டோம் என்று மகிழ்ந்திடுவோம்
எங்கெல்லாம் தமிழன் இருக்கின்றானோ
அங்கெல்லாம் நமக்கு அது சொர்க்கம் தான்
தமிழே உன் மானம் உள்ள தமிழன்
எதற்கும் சளைத்தவன் அல்லன்
எங்கும் எதிலும் என்றும் ஜெயித்தவனே
தமிழுக்கு பெருமை உண்டு
தமிழனுக்கு மமதை உண்டு

எழுதியவர் : பாத்திமா மலர் (5-Nov-14, 10:07 am)
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே