இன்றைய ஊடகங்கள்

கி.மு 11 ஆம் நூற்றாண்டில் கப்பல் கட்டிய இனம்
சூழியத்தை உலகிற்கே அறிமுக படுத்திய இனம்
ஹரப்பா மொஹெஞ்சதரோ ஆகிய உலக நாகரிகத்தின் தொட்டிலை தோற்றுவித்த இனம்
உலகின் பல இனத்தவர் கடல் கண்டிராத காலத்தில்
கடல் கடந்து போரிட்டு வெற்றிக்கொடி நாட்டிய இனம்
வீறுகொண்டெழுந்து வடநாடு தாண்டி இமயத்தில்
இமயத்தின் வீரம் கண்ட இனம்
வானியல் கண்டு வானின் உயர்ந்த இனம்

இன்று......

படபிடிப்பில் நடிகைக்கு காயம்
கணவனை கொன்ற மனைவி கள்ளகாதலனுடன் தப்பி ஓட்டம்
தலைவரின் அடுத்த படத்தின் நாயகி யார்?
போன்ற வீண்செய்திகளை முன்னிலைப்படுத்தி
என்னுறவுகளின் மூளையை மழுங்கடித்து
என்னினத்தை இழிநிலைக்கு தள்ளுகிறது
இன்றைய ஊடகங்கள்.

எழுதியவர் : துரைவாணன் (5-Nov-14, 3:31 pm)
பார்வை : 169

மேலே