நாளைய சமுதாயம்

நாளைய சமுதாயமே!
படியம்மா, படியம்மா படி, படி
படியப்பா, படியப்பா படி, படி
உன் வாழ்க்கை மென்மேலாக உயரும் படி
உற்றார் உறவினர்கள் எல்லாம் போற்றும் படி
உலகமே! உன்னை வியந்து பார்க்கும் படி
சோதனைகள் யாவும் வெற்றிக்கண்டு சாதனையாகும் படி
சாதனைகளை யாவும் சரித்திரம் பேசும் படி
தோல்விகள் யாவும் உன் வெற்றிக்கோட்டையின்
தூண்களாக எண்ணிக் கொண்டு படி
எல்லாவற்றுக்கும் மேலாக.....
உனக்காக உழைத்து ,உழைத்து ஊசி போல
தன்னுடலை உருவமாக்கி கொண்ட
உனது 'தாய்,தந்தை'க்காக படி
தாயகத்தின் முன்னேற்றத்துக்காக படி....!
இப்படிக்கு!
அருண்தாசன்
பி.காம்(சிஏ) 3-ம் ஆண்டு
பாவேந்தர் கலை மற்றும் கல்லூரி
மனிவிழுந்தன் தெற்கு
ஆத்தூர்(T.K)
சேலம் (D.T)-636121
அலைபேசி-7639210971

எழுதியவர் : அருண்தாசன் (5-Nov-14, 1:43 pm)
சேர்த்தது : அருண்தாசன்
பார்வை : 106

மேலே