விதைகள் ஓதும் மந்திரம்

ஒன்று:
உயிர்..
இரண்டு அடிகள்:
திருக்குறள்..
மூன்று அத்யாவசியம்:
உணவு,
உடை,
உறைவிடம்..
நான்கு வேதங்கள்:
ரிக்,
யசுர்,
சாம,
அதர்வண..
ஐம்பூதங்கள்:
நிலம்,
நீர்,
காற்று,
ஆகாயம்,
அக்னி..
அறுசுவைகள்:
இனிப்பு,
புளிப்பு,
கார்ப்பு,
உவர்ப்பு,
துவர்ப்பு,
கசப்பு..
ஏழு ஸ்வரங்கள்:
நிஷாதம்,
ரிஷபம்,
காந்தாரம்,
ஷட்ஜம்,
மத்யமம்,
தைவதம்,
பஞ்சமம்..
எட்டுதொகை நூல்கள்:
அகநானூறு,
கலித்தொகை,
குறுந்தொகை,
ஜங்குறுநூறு,
நற்றினை,
பதிற்றுபத்து,
பரிபாடல்,
புறநானூறு..
ஒன்பது கோள்கள்:
புதன்,
வெள்ளி,
புவி,
செவ்வாய்,
வியாழன்,
சனி,
யுரேனஸ்,
நெப்டியூன்,
புளுட்டோ..
பத்து பாட்டுநூல்கள்:
குறிஞ்சிப்பாட்டு,
சிறுபாணாற்றுப்படை,
திருமுருகு ஆற்றுபடை,
நெடுநல்வாடை,
பட்டினப்பாலை,
பெரும்பாண் ஆற்றுப்படை,
பொருநர் ஆற்றுப்படை,
மதுரைகாஞ்சி,
மலைபடுகடாம்,
முல்லைப்பாட்டு..

ஐயோ!!
போதும்.
இத்தோடு,
இப்பத்தொடு நிறுத்திக்கொள்கிறேன்.

ஆமாம்!!
என்புத்தியிலிருந்து,
இப்பத்தி(யி)லிருந்து
நான் என்ன சொல்லப்போகிறேன்??

ம்ம்ம்ம்............

தயவுசெய்து மன்னியுங்கள்..

நானொன்றும் சொல்லப்போவதில்லை.
ஆனால்,
உங்களிடம் மட்டும்
ஒரே ஒரு வினா வினவ காத்திருக்கிறேன்.

கேள்வி என்னவெடில்,

மொத்தம்,
இப்பத்தும் படைக்கப்பட்டது எதற்காக??

ஓரறிவு முதல் ஆறறிவு ஜீவராசிகளுக்காகவா??

அஃதாவது,
மரங்களுக்காய் படைக்கப்பட்டவையா??
"மா"க்களுக்காய் படைக்கப்பட்டவையா??
மக்களுக்காய் படைக்கப்பட்டவையா??

மரங்களுக்கேன்றாயின்,
மரங்கள் பிறந்தது எப்படி??

"மா"க்களுக்கேன்றாயின்,
"மா"க்கள் பிறந்தது எப்படி??

மானுடத்திற்கேன்றாயின்,
மனிதன் பிறந்தது எப்படி??

ஒரு நாழி
ஒரே ஒரு நாழி
ஆழமாய் உங்களுள் சிந்திதுப்பாருங்கள்
இவ்வினாவின் விடை புரியும்...

மரங்களானாலும்,
"மா"க்களானாலும்,
மானுடமானாலும்,

விதைகள் அன்றேல்
மரங்கள் இல்லை.
கனியில் ஒளிந்த விதை..

விதைகள் அன்றேல்
"மா"க்கள் இல்லை.
உறுப்பில் ஒளிந்த விதை..

விதைகள் அன்றேல்
மனிதன் இல்லை.
கருவாய் தோன்ற
உருவாய் நின்ற
விந்தை(து) நீரை ஒளித்துவைத்த விதை..

விதைதான்!!
விதைதான்!!
விதைதான்!!

விதைகள் அன்றேல்
இவைகள் இல்லை..
விதைகளின் விந்தையின்றி
இப்புவியும் இல்லை..
அட!! நான் எழுதிய
இக்கவியும் இல்லை..


உன்னை(உண்மை) சிந்தித்தால்
என்ற தலைப்பிற்காக
இக்கவியை சமர்பிக்கிறேன்..

Address :
K.RAGUL , ROOM NO 106 (MANDHARAI ),
ENGG COLLEGE HOSTELS ,
ANNA UNIVESITY ,
CHENNAI 600025..

எழுதியவர் : இராகுல்சாரதி (5-Nov-14, 5:28 pm)
பார்வை : 146

மேலே