குரு வாழ்க
வேதாந்த விளக்கமே..
நற்றுணை வேதியனே..
பொற்சபை ஈசனே!
ஸ்ரீ -ல -ஸ்ரீ சாது
பால கங்காதரனே!
..
எத்துனை பிறவி நான்
பிறப்பினுமுனை மறவேனே!
என் சிந்தையில் வைத்துனை
பூசனை செய்வேனே!
எத்திசை நான் ஏகிடும் போதிலும்
அத்திசை என்னுடனே துணை வரும்
தென்னாடுடைய சிவனே!
உன் பிச்சையில் வாழ்கிறேன்..!
தா..தா..உன்னை மறவா வரம் தா!
தந்தை தாயாவானும் நீயே!
கதி எனக்கு என்றும் நீயே!
குருவே!..போற்றி!..போற்றி!