வாழ்வின் முன்னோடி ரோல் மாடல்

படிக்கும் வயதில் ரஜினி ஸ்டைலையும்
கமலின் நடையையும் பழகி
நண்பர்களிடையே உலா வந்த போதும்
அப்பாவின் பணத்தை எடுத்து உதாரி தனமாக
செலவு செய்த போதும்
யார் யாரையோ வாழ்வின் முன்னோடியாக
எடுத்து கொண்ட நான்
கடைசி வரை என் வயிறு காய கூடாதென
வாடும் பாச ஜீவனை விட்டு விட்டு
ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்
இவரை போல் வாழ்வேன்
அவரை போல் வாழ்வேன் என
இப்போது தேர்ந்தெடுக்கிறேன்
என் தந்தையை என் வாழ்க்கையின் முன்னோடியாக
இப்[பொது தெரிகிறது எனக்கு
ரஜினி ஸ்டைலும் கமலின் நடையும்
அப்பா வருகையில் ........

எழுதியவர் : ருத்ரன் (5-Nov-14, 6:47 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 371

மேலே