நிலா இளைத்தது

முழு நிலா
மெல்ல மெல்ல இளைத்து
பிறை நிலவானது

ஏன் தெரியுமா ?

நிலாவைக் காட்டி
குழந்தைக்கு
நிலாச்சோறு ஊட்டினாள் தாய்

ஆனால்
ஒரு வாய் சோறு கூட
நிலாவுக்கு ஊட்டவில்லையே

எழுதியவர் : ஆ.ஜான் பிராங்ளின் (5-Nov-14, 8:20 pm)
பார்வை : 75

மேலே