பர்க்க தடையான கண்கள்
இறந்த காலத்தை
சொந்தமாக்கிக்கொண்ட
நம் உறவுகள்
உடலை மண்ணுக்கு தந்து
உயிரை விண்ணுக்கு தந்த
இவர்கள் நம்
கண்ணில் காண
இயலுவதில்லை
தடையாக இருப்பது
நம் கண்கள்தான்
மெல்ல கண்களை மூடி
உறவுகளின்
நினைவுகளை
நெஞ்சில் ஓடவிடுங்கள்
மறைந்த உறவுகளும்
மனதில் தெரிவார்கள்