சாயம் போன நட்பு----ப்ரியா

பள்ளி பருவத்தில்
துள்ளிக்குதித்த காலத்தில்
எண்ணிலடங்கா தோழியர்
அதிர்ஷ்டசாலி நானல்லோ.....
என்ற பேராசையில் நான்....!!

காலடி வைத்தேன்
கல்லூரியில்
ஆயிரம் நட்புகள்
மூன்றாண்டுகள் இன்பமாய் சென்றது
கொடுத்து வைத்தவள் நானன்றோ.....
என்ற இன்பக்களிப்பில் நான்....!!

பணியில் சேர்ந்தேன்
அதிக வேலைச்சுமை
தோழிகளின் நினைப்பும் இல்லை
எப்போதாவது ஒருநலம் விசாரிப்பு....

முகங்கள் மறைந்தது
முகவரி மட்டும் கையில்
நட்பின் சாயம் போவதாய்
உணர்ந்துகொண்டிருக்கிறேன்......!!

எழுதியவர் : ப்ரியா (6-Nov-14, 12:10 pm)
பார்வை : 348

மேலே