துகிலாத நினைவுகள்

துகிலாத நினைவுகள்

நித்தம் நித்தம் உன் நினைவால்
நித்திரையும் போனதடா
சத்தமின்றி என் மனது
உனக்கு சாதகமாய் ஆனதடா

சாஸ்திரங்கள் பார்த்ததில்லை
சாதி மதம் பார்த்ததில்லை
பாவி மகன் உந்தன் முகம்
பார்க்க பார்க்க சலிக்கவில்லை

கடை தெருக்குச் சென்றேன்
காய்கறிகள் வாங்கவில்லை
காற்று வாங்கச் சென்றேன்
கால்கள் ஏனோ நிற்கவில்லை

நேற்று சொன்ன வார்த்தைகளால்
நிகழ்காலம் நினைவில் இல்லை
எதிர்கால எதிபார்ப்பு ......
ஏனோ இன்று எனக்கு இல்லை

கண்ட கண்ட நேரங்களில்
உன் காதல் முகம் தோன்றுதடா
இக்காட்சி பிழை உணரும் முன்னே
காதல் என்னை தூண்டுதடா

என்ன என்ன எந்தன் நிலை
எனக்கு ஏனோ புரியவில்லை
புரியும் நிலை வந்தாலும்
அதை ஏற்கும் நிலையில் நான் இல்லை....................




JEI Mathaajee College of Engineering
Kanceepuram to Arakkonam Rd
Siruvakkam
Vishakandikupam Village
Kancheepuram-631 552
Dept : ME CSE Ist Year
Name : சுகந்தி .V

எழுதியவர் : சுகந்தி (6-Nov-14, 12:26 pm)
பார்வை : 167

மேலே