ஓய்ந்த அலைகள்
நீ என்னுடன்
பேசும் போது .
இரைச்சலிட்டுக் கொண்டிருந்த
இந்தக் கடலின் அலைகளை ..
மறுபடியும் தொடருங்கள் ..
நீ போன பிறகு..என்று சொன்னேன் !
காதல் மொழியில் நீ சொல்லும்
ஒவ்வொரு சொல்லையும்
உள்வாங்கிட அவை தடையாய் இருப்பதால் !
நம் காதலை கண்டு மகிழ்ந்த அலைகள்..
இப்போதைக்கு சப்தமில்லாமல்
நமக்காக..
எப்படி அமைதியாக தவழுகின்றன ..
அங்கே பார்!