காதலனுக்கு
அவளை பார்க்க முடியாத நாட்களை
கணக்கில் எடுத்துக் கொள்ளாதே..
உன் ஆயுளுக்கு!
அப்போதுதான் உன் ஆயுள் நீட்டிக்கப்படும்!
அவளோடு பேசாத கணங்களை எல்லாம்..
கழித்து விடு ..!
அவை செல்லாத ரூபாய் நோட்டுகள்!
யார் சொன்னது..அவள்
உன்னை விரும்பவில்லை என்று..
சொன்னவர்களை அடையாளம் கண்டு கொள்..!
அவளோடு இணையும் நாளன்று..அவர்களுக்கு விருந்து கொடு!
உனக்காகவே அவள் பிறந்திருக்கிறாள் ..
என்று எப்போதும் நினைத்து கொண்டேயிரு!
ஏனென்றால் உன்னை அப்படித்தான் அவளும் நினைக்கின்றாள்!
கல்யாணத்தை கொஞ்சம் தள்ளி போடு..
உன் அவசரத்தை காதல் தப்பாக எடுத்துக் கொள்ளும்!
உன் குரல் கேட்டவுடன் அவள் வரவில்லை என்று வருந்தாதே..
அவள் பெயரை நீ மனப்பாடப் பகுதி ஆக்கி விட்டாயா
என்று அவள் மறைந்து நின்று சோதிக்கிறாள்..
இரகசியமாய் தனக்குள்ளே சிரிக்கிறாள்..!
உன் சன்னலை எப்போதுமே திறந்து வைத்திரு..
அவள் மின்னலாய் கடக்கும் போது
உன்னைக் காண முடியாமல் துடித்திடக் கூடும்..
உன் வீட்டுக்குள்ளும் இதயத்திலும்
தென்றல் வீசுவதை தடுத்து விடாதே!