யார் இவளோ

தேவதை மண்ணில் இறங்கியதோ ?
வெயிலில் சற்று கிறங்கியதோ ?
கடற்கரை யோரம் ஒதுங்கியதோ ?
மரத்தடி நிழழில் பதுங்கியதோ ?
இவள் பின்னால் இருக்கும்
பின்னல் அழகைக்
கண்ணால் கண்டால் காய்ச்சல் வரும் !
இவள் பேசும் மொழியினை
வீசும் கடலலை
காதால் கேட்டால் மோட்சம் பெரும் !
அட இவளது முகத்தைக் காண்பதற்கே
கவிதைகளை நான் செய்கின்றேன் - அதன்
எதுகை மோனை அவளாக !
முரண்தொடையாய் நாணம் தீயாக !
-விவேக்பாரதி