ஒட்டிப்பிறந்த இரட்டையர்

என் தாயே!

கருப்பையிலும் பங்கு வைத்தாய்
இரைப்பையிலும் பங்கு வைத்தாய்
சிறுமூளையும் பெருமூளையும்
முகுளமுமே ஒன்று வைத்தாய்
தண்டுவடம் தாண்டிப்போன
நரம்புகளும் பின்ன வைத்தாய்!

கண்கள் இரண்டிற்கு
மூன்று வைத்தாய்
மூவுலகம் காண்பதற்கோ!

இரண்டிரண்டு கால்கள்
கணக்கிட்டால் வருவதுண்டு
ஒன்றரையே எனக்கு வைத்தாய்!

கருப்பையில் இருட்டென்பதால்
தவறிவிட்டயோ? என் தாயே ?
கேள்வி கேட்ட எனைப்பார்த்து
இறைவனே!' விடை என்றாய்.

விடைதேடி விடை பெற்றேன்
வருந்தாதே என் தாயே!
வெளிச்சாமாய்
வந்துதிப்பேன்!

எழுதியவர் : உறவு (6-Nov-14, 7:44 pm)
பார்வை : 279

மேலே