காத்திருங்கள்களிப்பு மழைக்கு

ஊக்குவிப்பு ஊதுகுழலும் உலா வரும் உன்னதங்களும்..!!!..

படைப்பாற்றல் மட்டுமே மனிதர்களை மனிதர்களிடம் இருந்து பிரித்து காட்டும் அன்னப்பறவை உறிஞ்சுக்குழாய் ஆகும்.

சரிகளிடம் இருந்து தவறுகளையும் தவறுகளிடம் இருந்து சரிகளையும் நிதர்சனமாய் ஓங்கிக் குரல் கொடுத்து உரக்க கூவும் விடியல் கால புள்ளினமே படைப்பாளிகள்.

கதை என்றும் கவிதை என்றும் நாடகம் எனவும் சமூக விடியலுக்கான பன்குரல் முழங்கும் படைப்பாளிகள் பல்கி பெறுகி வருதல் ஒரு நிலத்தின் பண்பாட்டு நிலைத்தலுக்கு உதவி செய்யும்.அன்றியும் இப்படிப்பட்ட படைப்பாளிகளை இனங்கண்டறிவதே இமாலய முயற்சி என்றாலும் இந்தப் படைப்பாளிகள் ஊக்குவிக்கப் பட வேண்டும். இப்பணி மனமிருந்தால் மட்டுமே நிகழும் ஒரு மாயாஜாலம் .

யானை மீதேற்றி பட்டும் பொருளும் வாரி வழங்கி அளித்தல் அல்ல ஊக்குவித்தல் .முதலில் படைப்பாளிகளுக்கு வாய்ப்பு சாலை அமைத்து அளித்தலே முக்கியமானது.இதன் மூலம் மட்டுமே சிதைந்து வரும் கலாச்சார சீரழிவு குறைக்கப் படும்: பிறமொழிக்கலப்பால் உரு மாறும் தாய்மொழி மாண்பு காக்கப்படும். இதற்கு படைப்பாளிகளுக்கு வாய்ப்பு அளித்தல் வேண்டும்..

இப்படிப்பட்ட வாய்ப்பை தமிழ் மொழியில் அளித்து வரும் ஓர் இணையதளமே எழுத்து.காம் ஆகும். இந்த தளத்தின் பன்னாட்டு படைப்பாளிகள் தமிழில் படைப்புகள் அளித்து வருகின்றனர் இவர்களின் படைப்புகளை தொகுத்து கவிதைகளுக்கு என்று மூன்று தொகுப்புகள் (யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும் ,அலகுகளால் செதுக்கிய கூடு , எனக்கென்று ஒரு முகம் இல்லை,)வெளியிட்டுள்ளேன்.இதில் பெண் படைப்பாளிகளுக்கு என்று தனியே ஒரு தொகுப்பும்(எனக்கென்று ஒரு முகம் இல்லை ) அடங்கும்.
பன்னாட்டுப் படைப்பாளிகளின் சிறுகதைத்தொகுப்பு “செங்காத்து வீசும் காடு ”எனும் பெயரில் அளித்துள்ளேன் வாசித்து மகிழ்க.தளம் மட்டும் அறிந்துள்ள இவர்கள் இன்று ஊரறியப்பட்டுள்ளனர்….நாளை உலகும் தான்!!

பலவித முயற்சிகள் தளத்தில் நடந்துக்கொண்டிருக்கும் இவ்வாண்டு முடிவடையும் காலத்தில் உள்ளது...

தோழர் ராஜேஷ்குமார் பெற்ற உயர் விருது...பல தோழர்கள் ஈரோடு தமிழன்பன் விருது பெற்றது.... தோழர் பழநி குமாரின் பிரமாண்ட விழா.., .....பலர் இணைந்து எறும்பு தேசத்தின் கொண்டை வளைவுகளில் எழுத்துத் தேரை இழுத்துச் சென்றது..தோழர்கள் ஈஸ்வரின் ....தம்புவின்...பிரியாவின்....திருமணம்...தம்பி வினோத் இரட்டை வரிக் கோட்டில் முனைவர் பட்டம் பெற்ற நிகழ்வு ....தம்பி கலை மகள் ஹே பிரியாவின் வாரிசின் வருகை..தோழர்கள் மட்டுமாவடி சிவபாலன் .யாத்விகா,முனைவர் நேரு....ஆகியோரின் நூல் வெளியீடுகள்..மூன்று படைப்பாளிகள் இணைந்து ஒரே தலைப்பில் எழுதுவது...பாதி படைப்பின் பின்னோட்டமாக தொடர்வது...அளிக்கப் படும் தலைப்புகளில் படைப்புகள் அளித்தல்...ஒரு வாரத்தின் சிறந்த கவிதைகள்.தெரிவு....நிலா சூரியனின் பொங்கல் விழா கவிதைப் போட்டி .... (வலைதள வரலாற்றில் முதன்முறையாக.... (சன் டி.வி பாணியில் இதை சொல்லி பார்க்கணும்...!! ) பலரும் ஒன்றிணைந்து சில தொகுப்புகள் வெளிக்கொணர செயல்பாடுகளில் மூழ்கியுள்ளமை...தனிநபர் போட்டிகள்...தோழர்களின் குரலில் தோழர் சர்நாவின் முயற்சியால் பாட்டுரை நிகழ்வு...என ..எத்தனை எத்தனை...நிகழ்வுகள்.........இவை யாவும் நமது அனைவரின் ஒட்டு மொத்த மகிழ்ச்சிக்காகவே...

நிறைவாக இவ்வாண்டின் "இணையதள படைப்பாளிகளின் பேரவை " வழங்கும் 2014-ஆம் ஆண்டின் விருதுகள் அளிப்பு ...இதோ இவ்வாண்டும் தொடர்கிறது...

ஆண்டுதோறும் தளத்தின் பல்வகை படைப்புகள் அளித்துவரும் நமது தோழமை நெஞ்சங்களைப் பாராட்டி விருதளித்து ஒரு வகை ஊக்கப்படுத்தும் செயல்பாடு பலருக்கும் உவகையை அளித்துள்ளது குறித்து தனிவிடுகைகள் ,அலை பேசி உசாவல்கள் என தங்கள் மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்..."கதை இன்னும் முடியவில்லை என " சிலரிடம் நான் அப்போது கூறியிருந்தேன்...சில நிகழ்ச்சிகளுக்கு சென்றிருந்ததால் இப்போது தொடர்கிறேன்...


காத்திருங்கள்..களிப்பு மழை விருது பொழிவாய் விரைவில்...

உங்களோடு இத்துணைக் காலம் என்னை இணைத்து வந்தமைக்கு அன்பும் நன்றியும் மொழிந்து விரைவில் பட்டங்கள் பட்டயங்கள் என உங்களுக்கான புத்தாண்டின் தொடக்க உற்சாக துள்ளல்களுக்கான தரை அமைப்பேன்...

காத்திருங்கள்..

அன்புடனும் ஆக்க விழைவுகளோடும்
அகன்

எழுதியவர் : அகன் (6-Nov-14, 7:56 pm)
சேர்த்தது : agan
பார்வை : 168

மேலே