என் விழிகள் கண்ணீரை சிந்துதடி 555

பெண்ணே...

நீ தந்த காதலின் வலி
உணர்கிறேன் தினம் தினம்...

உன்னை நான் தொடர்ந்து வந்த
முதல் நாளே சொல்லி இருக்கலாமே...

பிடிக்கவில்லை என்று...

எத்தனை பொழுதுகள்
எத்தனை மணித்துளிகள்...

எத்தனை நிமிடங்கள்
உனக்காக நான் தவறவிட்டவை...

சதைகளுக்கும் எலும்புகளுக்கும்
நடுவில் இருப்பதால் என்னவோ...

என் இதயத்தின்
வலியும் அழுகுரலும்...

உனக்கு கேட்காமலே
போகுதடி...

நீ தந்த வலிகளை
உணர்ந்ததால்தான்...

என் விழிகள்
கண்ணீரை சிந்துதடி...

என் கண்கள் உன்னை
ரசித்ததால்...

என் இதயம் உன்னை
என்னில் குடியேற்றியது...

நீ குடி இருந்த இதயகூட்டை
நொறுக்கிவிட்டாயடி...

நொறுங்கிய இதயத்தை
கைகளில் ஏந்தியபடி...

என் கண்கள் கலங்கியபடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-Nov-14, 9:34 pm)
பார்வை : 300

மேலே