தாய் மடியில் குழந்தையாவோம்

இறகை விரித்தால் பறக்கலாம்
இனிய உலகை ரசிக்கலாம்

கவலை மறந்தால் சிரிக்கலாம் - இந்தக்
கருத்தை மனதில் பதியலாம்

விழியில் எதற்கு கண்ணீர் ? என்னோடு
விரைந்து பறந்திட வாரீர்.....

வழியில் முட்கள் கிடக்கும் - அதை
வாரி எடுத்து கூடுகள் அமைப்போம்.....

குத்தும் என்ற கவலை வேண்டாம் - மீண்டும்
கொட்டும் மழையில் அது பூ பூக்கும்......

அழுதுக் கழிக்க வாழ்க்கை இல்லை - நாம்
அமைதியாய் துயில இயற்கை தாய் மடி.......!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (7-Nov-14, 7:02 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 131

மேலே