நீயே உன்னை ஆராயந்து பார்

ஒளி கொண்ட
அறையில்
அணையப் போகும் விளக்கை
அணையும் முன்பே
தானே ஓடிப் போய் அணைப்பவனுக்கு

இருள் சூழ்ந்த அறையில்
அணையப் போகும் விளக்கு கூட
சூரியன் தான்.

தென்றல் காற்று வீசினால்
அணைந்து விடுமே என்று
ஐயத்தில்
அவனால் அறையின்
சாளரங்கள் மூடப்படுமே அன்றி
விளக்கை அவன் ஓடிப் போய்
அணைப்பதில்லை.

நண்பா
உன் திறமைகளும் அப்படித்தான்
தேவையற்ற இடத்தில
அதை நீ நிரூபித்தாலும்
கண்டுகொள்வார் யாருமில்லை

முயற்சிகள் பல நீ செய்தாலும்
தேவையில்லை என்றே
உலகம் அதை உதறி விடும்

இருள் சூழ்ந்த அறையில்
ஒளிரும் விளக்கை போல
உன் திறமைகள்
பிரகாசிக்கவேண்டிய இடத்தில
பிரகாசித்தால்
உலகம் உன்னை வேண்டாம்
என்று உதறுவதும் இல்லை
நீ விழுந்தாலும்
தாழ்ந்து போவதில்லை
புகழ்ச்சியை நீயே
வேண்டாம் என்றாலும்
உன்னை யாரும் விடுவதுமில்லை.






ஒரு இலக்கை நோக்கி
இப்படிக்கு அன்புடன்

ஏனோக் நெஹும்

எழுதியவர் : ஏனோக் நெஹும் (7-Nov-14, 1:11 pm)
பார்வை : 708

மேலே