பாவம் பழிதீர்க்கும்

பாவம் பழிதீர்க்கும்!
பாவிகளே! பாவிகளே! சிங்களப் பாவிகளே!
பாவம்சும்மா விடுமோடா சண்டாளப் பேய்களே!
சாபமென்றும் பொய்க்காது சாவும் வீணாகாது.
தீபம்அதும் தீயும்முன் தீவிழுங்காத் தீராது..
உயிரோடு விளையாடி வயிரிங்கு எரியுதடா!
உயிரென்ன மயிராடா!உருப்படாப் பாவிகளா!
தின்னஉயிர் எத்தனை தீரலையோ பசியுனக்கு?
இன்னுமாபலி வேண்டும் என்னதான் வெறியுனக்கு?
தமிழென்றால் இளக்காரமா தர்மத்தின் திருவுரு.
கலிகாரக் கயவனே கணக்குண்டு காத்திரு!
பதிலென்ன கூறுவாய் பலிகொண்ட உயிர்களுக்கு.
விதியென்ன ஆறுமா வினையறுக்கப் பொறுத்திரு!
வெள்ளையர்க்கே கொள்ளிவைத்த வீரத்தமிழ் புதல்வருக்கு
புள்ளியொரு சல்லிநீ சொல்லுவாயோ போடுந்தூக்கு?
எண்ணுதற்கும் தூரமில்லை ஏவிடவும் கணையுனக்கு
பின்னெதற்காம் யோசனை உன்னெதிர்க்கும் உயிரங்கிருக்கு.
கோடிகோடி உயிர்களை கொண்டமகா சக்தியை
கூடிக்கூடி ஒன்றென குவிந்தமாக் காளியை.
தேடித்தேடி அழித்தாலும் கூடிக்கூடி தழைக்குமே!
ஓடிஓடி ஒளியவும் உனக்குஇடம் ஏதடா?
சூலம்தேடி வருகுதோ காலம்கூலி தருதற்கே!
நாளும்கூடி தீர்ப்பினை வேளையொன்றில் எழுதுமே!
பாவம்பழி தீர்க்குமே சாபம்பலி ஏற்குமே!
தீபஒளி அதுவரை தவமேற்று முடிக்குமே!
கொ.பெ.பி.அய்யா.