என்னவளுக்கு ஒர் மடல்
மனசே சாய்ந்நது போனது
உயிரும் உன்னோடு சேர்ந்தது
விழியும் உன்னை கானவே ஏங்குது.....
ஒர் ஜென்மம் போதும் உன்னோடு வாழ
அதை நினைக்கவே வேண்டுமே
ஏழு ஜென்மம்
என் காற்றும் உன் மூச்சோடு சேர்ந்து வாழ மண்டியிடுதே உன் முன்னே
எங்கே வைத்திருக்கிறாய் எனக்கான இடத்தை
உன் இதயம் நிரம்பி இருந்தாலும்
தொங்கிக்கொள்வேன் வெளிப்புறமாய்...
வானத்தையே கிழித்து எறிவேன் நிலம் நிறம்
உனக்கு பிடிக்காதென்றால்.
கண்ணீரையும் கடன் வாங்கினேன்
பெண்ணே
நீ என்னுடன் இல்லா நிமிடத்தில்.
வைரமுத்து உன்னை கண்டிருந்தால்
தமிழகம் உன் அழகின் புத்தகத்தை படித்திருக்கும்
ராஜபக்சேவை நீ கண்டிருந்தால்
அவருக்கு பொறுமையை கற்பித்திருப்பாய்...
நீ என்னுள் வாழ்வதால்
ஆக்ரா என்னிடம் கைமாற்ற பார்க்கிறது
தாஜ்மஹாலை நீ வைத்து கொள்
உன்னை என்னிடம் கொடு என்று...
மண்டிடுவேன் உன் தாயிடம்
கூட்டிச்செல்வேன் உன்னை
என் தாயிடம்...
உன்னை நேசிப்பதும்
என்னுள் நீ வாழ்வது மட்டுமல்ல
உன்னை காக்கும் காவலனாகவும்
என் காலம் முடியும் வரை உன் காலடியில்
உன் அன்பு காதலனாக...