துகிலாத நட்பு

தென்றல் காற்றாய்
தேன் நிலவின் ஒளியாய்
வார்த்தையின் வித்தாய்
வடிவத்தின் கீறலாய்
அன்னையின் அன்பாய்
தந்தையின் துடிப்பாய்
பிஞ்சு குழந்தையின் சினுங்களைவிட
பெரியோரின் பெரிய சொற்களைவிட
உன்னில் எப்போதும் அது ஒன்றிவிட
எப்போதும் வண்ணமயமாய்
எக்கலாத்திலும் நினைவுகளாய்
உன்னையே நீ அறிபவனாய் ஆக்கும் அது
உனக்குள் நீ ஒளிர்பவனாய் ஒலிக்கும் அது
கண்டிப்பாகவும் ஆக்கும் அது , மறுநிமிடம்
சிரிக்கவும் வைக்கும் அது,
திருத்தங்களை திருத்தும் அது, பலசமயம்
தீர்ப்புகளையும் வழங்கும் அது
பண்புகளை வளர்க்கும் அது, பலதடவை உனக்கு
பாராட்டுகளையும் பெற்று தரும் அது
உன்னை ஒற்றனும் ஆக்கும் அது
உன்னுடன் ஒன்றியே இருக்கும் அது
எந்நிலையிலும்
எந்த சூழ்நிலையிலும்
இதய துடிப்பில் ஒன்றாய்
ஓடும் குறுதியாய்
என்றும் ஈரமுடன்
நட்பு !
சந்தனலக்ஷ்மி ME CSE
டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
NPT MCET CAMPUS,pollachi,coimbatore-642 003