நீ நல்லா வருவடா
ஏங்க? உங்க வீட்டுக்காரர் அடிக்கடி ஏன் ரேஷன் கடைக்கே போறார்..?
எடை மிஷின்ல அவர எடை போட்டு பார்க்குறார் ..
ஏன்?
எடை குறைக்கணுமாம் ...
*******************************************************************************************************************************************************************
வாழைப்பழம் கொடுங்க?
எத்தனை சீப் வேணும் ?
நா என்ன தலை சீவுற சீப்பா கேக்குறேன்? பழம்தான கேக்றேன்
அதான்யா ..எத்தன சீப் வேணும்
என்னைய்யா சொன்னதையே சொல்ற?சீப்புக்கும் வாழப் பழத்துக்கும் வித்தியாசம் தெரில
???????
******************************************************************************************************************************************************************
அப்பா ஒரு கையெழுத்து வேணும்
எதுக்குடா?
சீக்கிரம் போடுங்க அப்புறம் சொல்றேன்
ஏண்டா லைட் ஆப் பண்ணுன?
எனக்கு சீக்கிரம் கையெழுத்து போடுங்க ....லைட்ட போடுறேன்
கையெழுத்து போட்டவுடனே போட்டுருவல்ல
ம்ம் ம்ம் ம்ம்
சரி இந்தா லைட்ட போடு ...என்னடா எல்லா பாடத்லயும் பைலாயிட்ட
அதுக்குதான் லைட்ட ஆப் பண்ணேன்
இதுக்குதான் என்கிட்டே இருட்டுல போடச் சொன்னியா? உன்ன திருத்தவே முடியாதுடா
இப்ப நீ திட்றல்ல இதுக்குதான்
எங்கடா ஓடுற?